Saturday, July 19, 2008

கல்வி

கல்வி கற்க வேண்டும் பாப்பா!
கல்வி கற்க வேண்டும் பாப்பா!

தமிழையும் கற்றிட வேண்டும் பாப்பா!
தமிழை வளர்க்க வேண்டும் பாப்பா!

சுற்றாடலும் கற்றிட வேண்டும் பாப்பா!

சுற்றுச் சுழலை பாதுகாக்க வேண்டும் பாப்பா!


கணிதமும் கற்றிட வேண்டும் பாப்பா!

எண் கணக்கிட வேண்டும் பாப்பா!


புவியிலை கற்றிட வேண்டும் பாப்பா!

பல செடிகளை நாற்றிட வேண்டும் பாப்பா!


உலகம் அறிந்திட வேண்டும் பாப்ப!

நேர்மையுடன் வாழ கல்வி கற்க வேண்டும் பாப்பா!

Thursday, June 12, 2008

சின்ன பாட்டு - திருக்குறள்

திருவள்ளுவரின் கையாலே
எழுதிய திருக்குறளாம்!
அழகாய் இரு வரிகளிலே
அமைந்த திருக்குறளாம்!
ஒவ்வொரு வரிகளிலே
அர்த்தம் சொல்லும் திருக்குறளாம்!
அன்பு பண்பு மிக்க
அறிவை புகட்டும் திருக்குறளாம்!
இதை எந்தநாளும் படித்து வந்தாலே
உனது திறன் வளரும் தன்னாலே!