Sunday, July 29, 2007

கணினி ஓவியப் போட்டிக்கான எனது முதல் படம்!

தலைப்பு - "கோடுகளால் ஆன பூச்சாடி"
முன்னே நான் வரைந்து வைத்தப் படம் என்பதால் இதன் அளவு சரியாக இருக்காது!




இது எனது இரண்டவது படம்!

தலைப்பு - ''அழகை ரசிக்கும் அன்னப்பறவைகள்"
அளவு சரியானதே

Friday, March 23, 2007

எனது கைவண்ணம் 3


இது கணனியில் இருந்த ஒரு படத்தை எனது கைவண்ணத்தால் இப்படி மாற்றினேன். எப்படி உள்ளது?

Thursday, March 22, 2007

எனது கைவண்ணம் 2

இதுவும் கணணியில் வரைந்த என்னுடைய இன்னுமொரு கைவண்ணம். இது என்ன என்று சொல்லுங்கள்?

Wednesday, March 21, 2007

கதை: தந்திரமில்லா நரி

ஓரு காட்டில் ஓர் நரி இருந்தது மற்றய நரிகளைப்போல் புத்திசாலித்தனமும்,தந்திரமும் இதற்கு கிடையாது. அதனால் அந்த காட்டில் உள்ள மற்றைய மிருகங்கள் இதை ஏமாற்றி வந்தன.

இப்படி ஒரு நாள் உணவைத்தேடி அலைந்து கொண்டிருந்த நேரம் அவ்வழியாக ஓர் கரடி உணவைத் தேடிக்கொண்டு வந்தது. அந்தக் கரடி நரியை கண்டது இதை எப்படியாவது ஏமாற்றி இதன் மூலம் இன்றைய உணவை முடித்துக்கொள்வோம் என்று எண்ணி அதனுடன் சென்று பேசியது."என்ன நரியாரே எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லையா?" என்று கரடி கேட்டது. அதற்கு நரி "ஆமாம் எங்குமே உணவு கிடைக்கவில்லை" என்றது. "சரி எனக்கு ஒரு உதவி செய்தால் என்னிடம் இருக்கும் உணவில் பாதி தருவேன்" என்று கரடி பொய் கூரியது.
நரியோ "சரி என்ன உதவி வேண்டும்?" என்று கேட்டது. கரடி "அதோ தெரிகிறதே மரம் அதில் மேல் உச்சியில் தேன் கூடு ஒன்று இருக்கிறது. என் கால் அடிபட்டு விட்டது என்னால் ஏறமுடியாது அதனால் நீ எடுத்து தந்தால் உனக்கு தரவேண்டிய பங்குடன் தேனும் கொஞ்சம் தருவேன்" என்றது.

அதன் தந்திரத்தை அறியாத நரி "சரி எடுத்து தருகிறேன்" என்று சொல்லி மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தது அதனால் ஏறமுடியவில்லை அத்துடன் தேனீக்களும் கொட்ட வருமே எப்படி எடுப்பது என்று யோசித்தது. பின் அதன் அம்மா ஒரு நாள் தேனீக்களை விரட்டியது அதற்கு ஞாபகம் வர அதே போல் செய்தது. கீழே கிடந்த ஒரு நீளமான தடியில் காய்ந்த சருகுகளான இலைகளை எடுத்து தடி நுனியுடன் சேர்த்து கட்டியது. பின் இரு கற்களை ஒன்றொடு ஒன்று உரசி தீயை உண்டாக்கி தடியில் பற்றவைத்தது. அதை மரத்தின் மேலே உயர்த்தி பிடித்து தேனீக்களை விரட்டியது பின் அதே தடியினால் தேன் கூட்டை கீழே வீழுத்தியது. அதை எடுத்து கரடியிடம் கொடுத்து தன் பங்கை கேட்டது.

கரடி தேன் கூட்டை எடுத்து தந்தமைக்கு நன்றி கூறி விட்டு "என் குகைக்குச் சென்று உன் பங்கை எடுத்து வருகிறேன் நீ இங்கேயே நின்று கொள்" என்று சென்று விட்டது. அது சென்றதுதான் சென்றது திரும்பி வரவேயில்லை. நரிக்கோ பசி தாங்க முடியவில்லை தன்னை அது ஏமாற்றி விட்டது என்று அப்போதுதான் அந்த நரிக்கு தெரியவந்தது.



Tuesday, February 6, 2007

விடைகள்

விடை தெரியவில்லையா! விடைகள் கீழே உள்ளது.

  1. சூரியன்
  2. அருவி(நதி)
  3. பருத்தி
  4. வாய்,நாக்கு
  5. வானம்,நட்சத்திரம்

விடுகதைகள்

  1. எரித்தாலும் எரிய மாட்டான் அவன் யார்?
  2. மலையிலிருந்து விழுவேன் கால் இல்லாமல் ஒடுவேன் நான் யார்?
  3. பல் இல்லாத வெள்ளையன் காட்டிலே,மேட்டிலே வாய்விட்டுச் சிரிப்பான் அவன் யார்?
  4. தட்டு விட்டுக்குள்ளே முட்டுப் பலகை அது என்ன?
  5. சுழகு நிறைய சோழப்பொறி விடிய பார்த்தா ஒன்றையும் காணோம் அது என்ன?

இதன் விடைகளை அடுத்த பதிவில் தருகிறேன். தெரிந்தவர்கள் விடைகள் என்ன என்று கூறுங்கள்!

என் அடுத்த வீட்டுப் பூனை


விரைவாய் என்னோடு விளையாட வந்துவிடும்
தீனியாய் நான் இடும் தின்பண்டத்தை திண்ணும்
மாயமாய் ஒரு நாள் சென்று விடும்
பரிவாய் என்னோடு கொஞ்சவரும்

உருளையாய் ஏதோ உறைக்குள் புகுந்துகொள்ளும்
மருண்டதாய் வெளிவரத்தெரியாது தவிக்கும்
மறைவாய் ரசித்து சிரிக்க விரைந்து உருளும்
தெளிவாய் உறையிலிருந்து என்கை மீட்கும்

மெதுவாய் முதுகைத்தட்ட இதமாய் வருடும்
உறையாய் மனதை ஒட்டி செல்லமாய் தாவும்
என் அடுத்த வீட்டு பூனை!

Friday, January 26, 2007

பஞ்சவர்ணக்கிளி


பஞ்சவர்ணக்கிளி பார்க்க அழகாய் இருக்கும்
அஞ்சு வர்ணம் அதிலே அழகாய் இருக்கும்
சிவப்பு மஞ்சள் பச்சை நீலம் ஊதா என வண்ணம்
அஞ்சு வகையாய் சிறகிலே மிகை இருக்கும்

Sunday, January 14, 2007

பொங்கள் வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாளாம்
தைப்பொங்கல் திருநாளாம்
பொங்கிவரும் பொங்கல் போல்
எங்கும் பொங்கட்டும் மகிழ்ச்சி!

அனைவருகும் தைபொங்கல் வாழ்த்துக்கள்!