கசட தபற வல்லினமாகும்;
கல்வி கற்பது கடமையுமாகும்!
ஙஞண நமன மெல்லினமாகும்;
நல்லதை நாடல் நம்செயலாகும்!
யரல வழள இடையினமாகும்;
யாவரும் இணைந்தால் நலம் பெறலாகும்
வல்லினம் கற்றால் வீரம் பேசலாம்;
மெல்லினம் கற்றால் மெதுவாய்ப் பேசலாம்!
இடையினம் கற்றால் எளிதில் பேசலாம்;
இளமையில் கற்றால் இனிக்கப் பேசலாம்!
2 comments:
ஆரணியா! கவிதை அருமை! யார் அம்மா சொல்லித்தந்தாங்களா? தொடர்ந்து எழுதுங்க! நிறைய சுட்டிகள் படிக்கணும் இல்லையா!
இந்த கவிதையை ஒரு புத்தகத்தில் இருந்து இங்கு எழுதினேன்.
நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன்.
நன்றி!
Post a Comment