இப்படி ஒரு நாள் உணவைத்தேடி அலைந்து கொண்டிருந்த நேரம் அவ்வழியாக ஓர் கரடி உணவைத் தேடிக்கொண்டு வந்தது. அந்தக் கரடி நரியை கண்டது இதை எப்படியாவது ஏமாற்றி இதன் மூலம் இன்றைய உணவை முடித்துக்கொள்வோம் என்று எண்ணி அதனுடன் சென்று பேசியது."என்ன நரியாரே எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லையா?" என்று கரடி கேட்டது. அதற்கு நரி "ஆமாம் எங்குமே உணவு கிடைக்கவில்லை" என்றது. "சரி எனக்கு ஒரு உதவி செய்தால் என்னிடம் இருக்கும் உணவில் பாதி தருவேன்" என்று கரடி பொய் கூரியது.
நரியோ "சரி என்ன உதவி வேண்டும்?" என்று கேட்டது. கரடி "அதோ தெரிகிறதே மரம் அதில் மேல் உச்சியில் தேன் கூடு ஒன்று இருக்கிறது. என் கால் அடிபட்டு விட்டது என்னால் ஏறமுடியாது அதனால் நீ எடுத்து தந்தால் உனக்கு தரவேண்டிய பங்குடன் தேனும் கொஞ்சம் தருவேன்" என்றது.
அதன் தந்திரத்தை அறியாத நரி "சரி எடுத்து தருகிறேன்" என்று சொல்லி மரத்தின் மேல் ஏற முயற்சி செய்தது அதனால் ஏறமுடியவில்லை அத்துடன் தேனீக்களும் கொட்ட வருமே எப்படி எடுப்பது என்று யோசித்தது. பின் அதன் அம்மா ஒரு நாள் தேனீக்களை விரட்டியது அதற்கு ஞாபகம் வர அதே போல் செய்தது. கீழே கிடந்த ஒரு நீளமான தடியில் காய்ந்த சருகுகளான இலைகளை எடுத்து தடி நுனியுடன் சேர்த்து கட்டியது. பின் இரு கற்களை ஒன்றொடு ஒன்று உரசி தீயை உண்டாக்கி தடியில் பற்றவைத்தது. அதை மரத்தின் மேலே உயர்த்தி பிடித்து தேனீக்களை விரட்டியது பின் அதே தடியினால் தேன் கூட்டை கீழே வீழுத்தியது. அதை எடுத்து கரடியிடம் கொடுத்து தன் பங்கை கேட்டது.
கரடி தேன் கூட்டை எடுத்து தந்தமைக்கு நன்றி கூறி விட்டு "என் குகைக்குச் சென்று உன் பங்கை எடுத்து வருகிறேன் நீ இங்கேயே நின்று கொள்" என்று சென்று விட்டது. அது சென்றதுதான் சென்றது திரும்பி வரவேயில்லை. நரிக்கோ பசி தாங்க முடியவில்லை தன்னை அது ஏமாற்றி விட்டது என்று அப்போதுதான் அந்த நரிக்கு தெரியவந்தது.
2 comments:
வழக்கமா நரி தானே எல்லாத்தையும் ஏமாத்தும் :)
கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்றுதான்... :)
நன்றி!
Post a Comment